தளபதி 63 படம் என்னுடையது , குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா ஆதங்கம்…!

விஜய் & அட்லி மூன்றாவதாக கூட்டணி அமைந்து இணைந்திருக்கும் படம் விஜய்யின் 63வது படமாகும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் தளபதி 63 படம் தன்னுடையது என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா கூறியுள்ளார்.நான் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். இதை ட்ரீம் வாரியர் பிக்ஸர் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோ நிறுவனத்திடம் கூறியிருந்தேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்ட போது திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிட கூறினார்கள். ஆனால் அங்கு முறையிட்டதற்கு சங்கத்தில் 6 மாதத்திற்கு மேல் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கதை திருட்டு என புகார் தெரிவிக்க முடியாது என தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில் பட கதை குறித்து அட்லியின் மேனேஜர் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் எக்ஸிகுடிவ் தயாரிப்பாளர் இந்த கதை விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம். உங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என கூறியது மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: atlee, KP Selva, story theft, Thalapathy 63, vijay
-=-