ராமேஷ்வரம்,

ன்று தை அமாவாசை என்பதால், லட்சகணக்கான பக்தர்கள் ராமேஷ்வரம் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

தமிழகத்தில் ராமேஷ்வரம் கடற்கரை தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்கு உகந்தது. இங்குள்ள  அக்னி தீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். தென்னகத்து காசி என அழைக்கப்படும் ராமேஷ்வரம் இந்துக்களிடையே பிரசித்தி பெற்றது.

இந்துக்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க மகாளய அமாவாசை,  ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையை தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த நாட்களில் திதி கொடுத்தால் முன்னோர்கள் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை.

அதன்படி இன்று தை அமாவாசயையொட்டி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள்  வர தொடங்கி னர். தமிழகத்தில்  பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக பக்தர்கள் ராமேசு வரத்துக்கு வந்தனர்.

திதி கொடுப்பவர்கள்  இன்று அதிகாலை 4 மணியளவில் அக்னி தீர்த்தக் கடலில்  புனித நீராடிவிட்டுகடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

லட்சக்கணக்கானோர் ராமேஷ்வரம் கடற்கரையில் கூடியிதால்,  கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டத்தால் அலை மோதியது.

அதைத்தொடர்ந்து காலை 7 மணியளவில்  ராமர் பஞ்ச மூர்த்திகளுடன் கருடவாகனத்தில் எழுந்தருளி  அக்னி தீர்த்தக்கடலில் நீராடினார். பின்னர் அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தவாரி நடந்தது.

நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில்  அமாவாசை தோறும் பக்தர்கள்,  அக்னி தீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.