போராட்டத்துக்கு ஆதரவு அளித்தால் சமூக விரோதியா… மணல் கொள்ளையன் சமூக காவலரா?:  சீமான் கேள்வி

Must read

சென்னை,

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்கள் சமூக விரோதியா என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி விடுத்தார்.

ஜல்லிக்கட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் பகுதி மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை சந்தித்து பேசினார்..

பிறகு செய்தியாளர்களிடம்  பேசினார். அப்போது அவர், “ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சென்னை மெரீனாவில் அறவழியில் போராட்டத்தை நடத்தினார்கள்.

ஆனால் அரசும், காவல்துறையும் கூட்டணி வைத்து, அதை ஒரு வன்முறை களமாக மாற்றி விட்டது.   அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றதாக காட்டிவிடக் கூடாது என்பதற்காக திட்ட மிட்டடு நிகழ்த்தப்பட்ட அரசு வன்முறைதான் இது.

நடுக்குப்பத்தில் உள்ள மீன் சந்தைதான் அம்மாக்களுக்கு வாழ்வாதாரம். அதை கொளுத்தி இவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டிய அவசியம் என்ன?

போராடும் இளைஞர்களுக்கு தண்ணீர், சாப்பாடு கொடுத்ததை தவிர இவர்கள் வேறு என்ன செய்தார்கள்? இந்த குப்பத்தில் வாழும் மக்களும், மீனவ மக்களும் இல்லாமல் இளைஞர்கள்  போராடியிருக்க முடியாது. ஆகவேதான் குப்பத்து மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படியானால் மண்ணின் உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு ஆதரவாக இருப்பது மிகப் பெரிய குற்றமா? இவர்கள் க சமூக விரோதியா? அப்படியானால்  ஆற்று மணலை அள்ளி விற்பவன்,  மலையை குடைந்து விற்கிறவன், மரத்தை வெட்டி விற்பவன், , பல கோடி ரூபாய் லஞ்சம், ஊழல் செய்பவனெல்லாம் சமூக காவலர்களா? இவற்றைஎதிர்த்து போராடுபவர்கள் சமூக விரோதியா?

பெண் காவலர்கள் உட்பட பல காவலர்கள்  பாஸ்பரஸ் தூவி நடுக்குப்பத்தை கொளுத்தி யிருக்கிறார்கள். திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தி, இனிமேல் தமிழர்களாகிய மாணவர்கள், இளைஞர்கள்,  போராட வரவே கூடாது, போராடுவபவர்களுக்கு  ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த மக்களுக்கு வந்திரக் கூடாது என்பதுதான் அரசு மற்றும் காவல்துறை நோக்கம்.

காயம்பட்டவர்களை சிகிச்சை அளித்து வந்த அரசு மருத்துவமனை அவர்களை வெளியேற்றி விட்டது. அவர்கள் எங்கு போய் சிகிச்சை பெற்றுக்கொள்வார்கள். அரசு அதிகாரம் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமா, அழிக்க வேண்டுமா?

நடுக்குப்பத்துக்கு தினம் காலையில் வந்து காவல்துறையினர் மிரட்டுகின்றனர். ஒரு தனித்தீவு போல நடுக்குப்பம் ஆக்கப்பட்டிருக்கிறது.  யாரும் இங்கு வரமுடியாது. யாரும் இங்கிருந்து போகமுடியாது.

உடனடியாக மீன் சந்தையை அரசு அமைத்து தர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு அளிக்க வேண்டும். எங்களைப் போன்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டி ருக்க மாட்டோம். இவர்களுடன் இணைந்து போராடுவோம்” என்று சீமான் தெரிவித்தார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article