மும்பை:
ங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாடும் முதல் இரண்டு டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த போட்டியில் விராட் ஹோலி தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த தொடர் வரும் 9ந் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டி ராஜ்காட்டில், நவம்பர் 9ந் தேதி முதல் 13ந் தேதி வரையில் நடைபெறுகிறது.
அதன்பின்னர் விசாகப்பட்டினம் (17-21), மொகாலி (26-30), மும்பை (டிச.8-12), சென்னை (டிச.16-20) ஆகிய இடங்களில் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள்,  மும்பையில் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.  முதல் இரண்டு போட்டிகளுக்கான வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு  இன்று அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட  காம்பீருக்கு  வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா,  முதல் முறையாக டெஸ்ட் அணியில் இணைந்து விளையாட இருக்கிறார்.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்: விராட் கோலி, அஸ்வின், காம்பீர், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, முகமது ஷமி, புஜாரா, ரகானே, சகா, கருண் நாயர், முரளி விஜய், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ்.
முன்னணி பேட்ஸ்மேன்களான லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் காயமடைந்துள்ளதால் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.