திருவனந்தபுரம்,
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதை எதிர்த்து கேரள அரசு  உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கினற்ன.
இந்த பிரச்சினை குறித்து கேரள அரசு, மாநில தலைமை வழக்கறிஞருடன் இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் மத்திய அரசின் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரள அரசு, அட்டப்பாடி வனப்பகுதியில் உள்ள முக்காலி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், காவிரி ஆற்றின் துணை நதியாக இருக்கும் சிறுவாணி, மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறாக விளங்கு கிறது. காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மீறி, அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசன திட்டத்துக்காக சிறுவாணி ஆற்றின் குறுக்கே 4.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டும் திட்டத்தை கேரள அரசு தொடரக்கூடாது என்று கேரள அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று ஏற்கனபே பல முறை மத்திய அரசும், மத்திய நீர்வளத்துறைக்கும் கடிதம் எழுதியிரருப்பதாக தெரிவித்து இருந்தார்.
siruvani
இதையடுத்து, கேரளாவில் அணை கட்டும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இடையறாத முயற்சிகள் காரணமாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு தனது 96-வது கூட்டத்தில், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்டும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு நிலையான ஆய்வு வரம்புகளை மத்திய அரசு வழங்கலாம் என்று அளித்த பரிந்துரையை தற்போது மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அணை கட்டுவது தொடர்பாக மத்திய வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தமிழக அரசின் ஓப்புதல் பெறும் வரை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் காவிரி தொடர்பான தமிழக அரசின் வழக்குகள் முடியும் வரை திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து, கேரள அரசு, அணை  கட்டுவது தொடர்பான மத்திய அரசின் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து கேரள அரசு, மாநில தலைமை வழக்கறிஞருடன் இன்று ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனையில் மத்திய அரசின் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.