வெளிநாட்டு வேலை: எச்சரிக்கை தகவல்….

Must read

-நெட்டிசன்
வெளிநாட்டில் வேலை தேடும், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்களின் கவனத்திற்கு – ஒரு எச்சரிக்கை தகவல்
ஐக்கிய அரபு அமீரக நாட்டில், அபுதாபியில், எகிப்து நாட்டை சார்ந்த முதலாளி  பிலால் தாஹா எனும் இனவெறி பிடித்த மிருகத்தால் நடத்தப்படும் மூன்று கம்பெனிகளான,
 “சாஸ்கோ ஏர் கண்டிசனின் எல்.எல்.சி.”, “சுவைதி அன்ட் ஷாம்ஸ் காண்டிராக்டிங் கோ” மற்றும் “கல்ப் சன் ஜெனரல் காண்டிராக்டிங் எஸ்டாப்ளிஷ்மென்ட்”, நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவை என்று இந்தியா முழுவதும் ஏஜெண்டுகள் மூலம் ஆள் சேர்ப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது.
140க்கு மேற்ப்பட்ட தொழிலாளர்கள் தேவை என இந்தியா முழுவதும் அதற்கான ஏஜெண்டுகளை வைத்து ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

ஆகவே, வேலை தேடும் இளைஞர்களே சற்று கவனித்து, அந்த நிறுவனத்தின் மனித உரிமை மீறல் குறித்து அறிந்து கொள்ளுங்கள்…. மாட்டிக்கொண்டு முழிக்காதீர்கள்… உங்களின் மேலான கவனத்திற்காகவே இந்த பதிவு….
இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால், கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:
ஒரு நாளைக்கு இரண்டு நிமிடத்திற்கு மேலாக கழிவறை பயன்படுத்தினால் மாதம் 150 திர்ஹாம்ஸ் பணத்தினை (இந்திய ருபாய் சுமார் 3000 மதிப்பு )தொழிலாளரின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்கின்றனர். 
ஒரு நாள் விடுப்பு எடுத்தால் இருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. 
பொறியாளர், சூபெர்வைசர், மேலாளர் ஆகியோரிடம் விதிமீறல் மற்றும் சட்டவிரோத செயல்களை எதிர்த்து கேள்வி எழுப்பினால், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். 
பாஸ்போர்ட், மருத்துவ காப்பீடு அட்டை, எமிரேட்ஸ் ஐ.டி., போன்ற ஆவணங்கள் சட்ட விரோதமாக பறிமுதல் செய்யப்படும்.
ஏதேனும் எதிர்த்து பேசினால்,  தொழிலாளரை மாதக்கணக்காக சம்பளமும் வழங்காமல், உணவு மறுக்கப்பட்டு, தங்குமிடமும் மறுக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.
இதுபோன்ற கம்பெனிகளில் மாட்டிக்கொண்டு ஏராளமான  இந்திய தொழிலாளிகள் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
தயவு செய்து யாரும் ஏமாற்றம் அடைந்திட வேண்டாம்.  உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிவித்து யாரும் பாதிக்கப்படாமலிருக்க, எச்சரிக்கை செய்து உதவுங்கள்.

More articles

Latest article