சென்னை,
டலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கன  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வங்க கடலில், அந்தமான் அருகே உருவான குறைந்த அழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
balachandran
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்  கூறியதாவது,
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவான குறைந்த அழுத்த தாழ்வு பகுதி வலு்ப்பெற்றுள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. அது, தாழ்வு மண்டல பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.
rain1
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, பொன்னேரியில் 8 செ.மீ., சாத்தான்குளத்தில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரியில் கன மழை இருக்கும். உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கன  மழைக்கு வாய்ப்பு என்று கூறினார்.