5 லட்சத்து 65 ஆயிரம் கோடி எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலம் வெறும் 66 ஆயிரம் கோடிக்கும் மட்டுமே விலைபோனதால் மத்திய அரசு ஏமாற்றம் அடைந்துள்ளது.

spectrum

தொலைத்தொடர்பு துறை சார்பாக ஏலத்திற்கு நியமிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையில் 4ஜி உட்பட 60 சதவிகித அலைக்கற்றையை ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வராததே மத்திய அரசின் ஏமாற்றத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

பிரிட்டன் நிறுவனமான வோடஃபோன் மட்டுமே அதிகபட்சமாக 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றையை வாங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பாரதி ஏர்டெல் 14,244 கோடி ரூபாய்க்கும், ஐடியா செல்லுலார் 12,798 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தன.
ரிலையன்ஸ் ஜியோ 13,672 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை மட்டுமே ஏலத்தில் வாங்கியது.
மொத்தம் 2,354.55 MHz அலைக்கற்றையில் வெறும் 2,354.55 MHz  அளவிலான அலைக்கற்றை மட்டுமே ஏலம் கேட்கப்பட்டதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். இதற்காக அரசு ரூ.32,000 கோடியை முன்பணமாகப் பெற்றுள்ளது. இது கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிகான தொகையாகும்.