திடுக்கிடும் தகவல்: சென்னையிலும் ஊடுருவினர் ஐ.எஸ். பயங்கரவாதிகள்!

Must read

சென்னை,
லகத்தையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பினர்  தமிழகத்திற்குள்ளும் ஊடுருவி உள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு டன் தொடர்புடைய, மூன்று பேர் ஊடுருவியுள்ள தகவலை அடுத்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பெரியமேடு பகுதியில் பதுங்கியிருந்த மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர்.
கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில இளைஞர்கள், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட, சதி திட்டம் தீட்டி வருவதாகவும், அவர்கள், தென் மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக  என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து, என்.ஐ.ஏ., சிறப்பு படை, தமிழகம், கேரளா, தெலுங்கானா மாநில போலீசார் உதவுடன் அதிரடி நடடிவடிக்கையில் இறங்கினர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் கண்ணுார் நகரங்களில் கடந்த 3ந்தேதி ஆறு பேரை கைது செய்தனர். அவர்களில், ஐந்து பேர், கண்ணுார் அருகே உள்ள  கனகமலா என்ற மலைப் பகுதியில் கூட்டம் கூடி சதித் திட்டம் தீட்டிய போது சிக்கினர்,  மற்றொருவன்  கோழிக்கோட்டில் சிக்கினான்.
இவர்களில் இரண்டு பேர் தமிழகத்தில் தங்கி இருந்து, வேவு பார்த்து வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்  சுவாலி முகம்மது என்பவன், சென்னை கொட்டி வாக்கத்தில் குடும்பத்து டன் தங்கியிருந்ததும், அபு பஷீர் என்பவன், கோவை, உக்கடம் பகுதியில் பதுங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் விசாரணையில்,  கேரளாவில் பிடிபட்ட பயங்கரவாதிகள்  கொடுத்த தகவல் அடிப்படையில்,  கடநத் 4ந் தேதி, திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லுாரில்,  வீடு ஒன்றில் பதுங்கியிருந்த சுபுஹானி ஹாஜா மைதீன், என்பவனை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவனும் ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் ஆதரவாளர்  என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இவனிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில் பல  திடுக் கிடும் தகவல்கள் வெளியாகின. ‘ஹாஜா மைதீன் ஏற்கனவே ஈராக் சென்றிருந்ததும், அங்கு  ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் போர் பயிற்சி பெற்று, சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் பங்கேற்று, பின்னர் இந்தியா திரும்பியதும் தெரியவந்தது.‘
அவனிடம் விசாரித்ததில், கேரளாவில் முக்கிய நீதி பதிகளின் தலைக்கு குறி வைத்ததும், வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை கொல்ல திட்ட மிட்டதும் தெரியவந்துள்ளது. அதையடுத்து  கைது செய்யப்பட்டான்.
இதற்கிடையில், சென்னை பெரியமேட்டில், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய, மூன்று பேர் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து,  என்.ஐ.ஏ., அதிகாரிகள், பெரியமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில்  சோதனையில் இறங்கினர்.
is-chennai
அங்கு தங்கியிருந்த, 3 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  அவர்கள் தெரிவித்த தகவலின்படி,  ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய, சாதிக் என்பவன் பற்றி தகவல் கிடைத்துள்ளது. அவன் கராத்தே மாஸ்டர் என்றும் தெரிய வந்தது.
கைதான மூன்று பேரும் சாதிக்கிடம் கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை கற்று வந்த தாகவும் கூறி யுள்ளனர்.
இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுபுஹானி என்ற பயங்கரவாதி கேரளா மாநிலம் தொடுப்புழாவை பூர்வீகமாக கொண்டவன் என்றும்,  திருநெல்வேலி  மாவட்டம், கடையநல்லுார், காதர் மொய்தீன் பள்ளிவாசல் தெருவில், குடும்பத்துடன் வசித்து வந்ததும்,  பெற்றோர் மற்றும் மனைவியிடம், மெக்காவிற்கு புனித பயணம் போவதாக கூறி, ஐ.எஸ். அமைப்பில் சேர கடந்த வருடம் ஏப்ரல் 8ந்தேதியன்று சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
மேலும்,  சென்னையில் இருந்து, துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்குச் சென்று, அங்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து, ஈராக்கில், ஐ.எஸ்., கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று, அங்கு போர் பயிற்சி பெற்றுள்ளான்.
பின், மோசூல் நகருக்கு சென்று போரில் ஈடு பட்டுள்ளான். அவனுக்கு உணவு, தங்கும் இடம் மற்றும், 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப் பட்டுள்ளது.
ஆனால், அவன் கண் எதிரிலேயே கூட்டாளிகள் இருவர், குண்டு வீச்சில் கரிக் கட்டையானதை பார்த்து அதிர்ந்துள்ளான். உயிருக்கு பயந்த அவன், ஊர் திரும்ப போவதாக கூறியுள்ளான். அதனால், அவனை பயங்கரவாதிகள் கைது செய்து கொடுமைப் படுத்தி உள்ளனர்.
அவனையும், அவனை போல் நாடு திரும்ப நினைத்த சில வெளிநாட்டினரையும், அவர்களது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின், சிரியாவில் உள்ள ரக்கா என்ற இடத்தில் சிறை வைத்தனர். சில மாதங்களுக்கு பின், அவன் இஸ்தான்புல் திரும்ப, பயங்கர வாதிகள் அனுமதித்தனர்.
அங்கு இருவாரம், சட்டவிரோதமாக தங்கியிருந்த பின், இந்திய துாதரகத்தை அணுகி, நாடு திரும்ப உதவி கோரியுள்ளான்.
குடும்பத்தினரிடம் பேசி, டிக்கெட்டிற்கு பணம் அனுப்ப கூறியுள்ளான். துருக்கி போலீசார் ஒப்புதல் தந்ததும், மும்பைக்கு, 2015 செப்., 22ல் வந்துள்ளான்.
அதன்பின், கடையநல்லுார் சென்று குடும்பத்துடன் தங்கி, நடைக்கடையில் வேலை செய்தான். ஐ.எஸ்., உத்தர வின்படி, சிவகாசியில் வெடி மருந்துகளை சேகரித்து, சொந்த நாட்டில் தாக்குதல் நடத்த திட்டம் வகுத்துள்ளான். இந்த சதி திட்டத்திற்காக, சென்னை, கோவை உள்ளிட்ட  இடங்களுக்கு சென்று, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்ட, பலரை சந்தித்துள்ளான்.
பெரியமேட்டில் பதுங்கியிருந்ததாக கூறப்படும் மூவரை, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். அத்துடன், என்.ஐ.ஏ., விசாரணையில், கடைய நல்லுாரில் பிடிபட்டவன், ஈராக்கில் பயிற்சி பெற்ற தகவலும் அம்பலமாகி உள்ளது.

More articles

Latest article