சென்னை: டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.மனுமீதான வழக்கை சென்னை உயர்நிதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீதான ரூ.800 கோடி முறைகேடு விவகாரம் மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில், அவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை  எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து சொத்து குவிப்பு மற்றும் டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு, எஸ்.பி. வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறியதுடன்  டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவும் அதேபோல் தமிழக அரசு தரப்பில் கேவியட் மனுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான முறைகேடு விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் உள்ளது. அதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையும் விரிவாக விசாரித்துள்ளது. ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்துள்ளது. அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, எஸ்பி வேலுமணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனது தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என எஸ்.பி.வேலுமணி மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.