சென்னை,

மிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு, உளுந்து, பாமாயில் போன்ற பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை.

இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போர்க்குரல் எழுப்பிவருகின்றனர்.

ரேஷன் கடைகளில் உணவுபொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து, தமிழக பாரதியஜனதாவின் பெண்கள் அணி சார்பில் சென்னை   கலெக்டர் அலுவலகம் அருகே  தமிழக அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை பேசிய தாவது,

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் சரிவர வழங்கப்படுவது இல்லை. நாங்கள் ரேசன் உணவு பொருட்கள் பிரச்சினைக்காகத் தான் போராட்டத்தை அறிவித்தோம்.

ஆனால்,  இப்போது மேலும் பல பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.

மேலும், ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு காரணம் டெண்டர் விடுவதில் பிரச்சினை என்கிறார்கள். அது டெண்டர் பிரச்சினையா? அல்லது டெம்பிரரி அரசு பிரச்சினையா? என்பது தெரியவில்லை.

தமிழக அரசு வாட் வரி உயர்த்தியதன் காரணமாக எல்லா பொருட்களும் 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது என்று அரசு மீது குற்றம் சாட்டினார்.

மேலும்,  மத்திய அரசு ஒரு சிறு அளவில் வரி உயர்வு கொண்டு வந்தால் கூட கொந்தளிக்கி றார்கள். இப்போது நேரடியாகவே இவ்வளவு சுமையை மக்கள் மீது ஏற்றியிருக் கிறார்கள்.

பா.ஜனதாவை பொறுத்தவரை பூவில் தேன் எடுப்பது போல் வலி தெரியாமல் வரியை ஏற்றும். ஆனால் வலிக்க வலிக்க வரி போடுகிறது தமிழக அரசு என்றார்.

மேலும்,  உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் மானியம் எதையும் மத்திய அரசு குறைக்கவில்லை எனவும், வீணாக மத்திய அரசு மீது பழி போடுவது தவறு என்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.