ஸ்டாலின் சொத்து கணக்கை காட்டத் தயாரா? தமிழிசை சவால்

Must read

சென்னை,

மிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களது சொத்துக்கணக்கை காட்டத் தயாரா? என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை கேள்வி விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பா.ஜனதாவை வளர்க்க முடியாததால் தி.மு.க. மீது அடிக்கடி குற்றம் சாட்டுவதாகவும், குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ.க. தமிழகத்தில் வளராது என்றும், பாரதியஜனதா மேல்தட்டு மக்களின் கட்சி என்று  ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இதற்கு தமிழ்நாடு பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை பதில் கூறியுள்ளார்.

அப்போது,  திமுக எத்தனை குட்டிக்கரணம் போட்டு கட்சியை வளர்த்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும்,  அதைவிட நன்றாக குட்டிக்கரணம் போட்டு எங்களாலும் பா.ஜனதாவை வளர்க்க முடியும் என்று கூறினார்.

மேலும், திராவிட கட்சியினரை தேசிய சிந்தனையுடன் மத்திய அமைச்சர் களாக்கி அழகு பார்த்தது பா.ஜனதா என்பதை அவர் மறந்து விடக்கூடாது என்றும்,

நாங்கள் அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களது பிரச்சினைகளுக்காகவும் பாடு பட்டு கொண்டிருக்கிறோம் என்றார்.

மேலும்,  எங்கள் கட்சி  நிர்வாகிகள் சொத்து கணக்கை காட்ட தயாராக இருக்கி றோம் என்றும்,  மு.க.ஸ்டாலினும், அவரது கட்சி நிர்வாகிகளும் சொத்துக் கணக்கை வெளியிட தயாரா? என்று சவால் விடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

More articles

Latest article