பன்னீரை ஆதரிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Must read

சென்னை:

எம்.பி.க்கள் மைத்ரேயன், திருப்பூர் சத்யபாமா, கிருஷ்ணகிரி அசோக் குமார், திருவண்ணாமலை வனரோஜா, நாமக்கல் சுந்தரம் ஆகியோர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று வரை எம்.பி.க்களின் எண்ணிக்கை 5 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று வேலூர் எம்.பி. செங்குட்டுவன், தூத்துக்குடி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பெரம்பலூர் எம்.பி. மருதராஜா ஆகிய 3 பேர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இவர்களை தொடர்ந்து விழுப்புரம் தொகுதி மக்களவை எம்.பி. ராஜேந்திரன், ராஜ்யசபா எம்.பி. லட்சுமணன் ஆகிய 2 பேரும் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் பன்னீரை ஆதரிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது

More articles

Latest article