கவர்னருடன் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் திடீர் சந்திப்பு

Must read

சென்னை:

ஆளுநர் வித்யாசகர் ராவை ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் திடீரென இன்று சந்தித்து பேசினார்.

முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டு அணிகளாக நிற்கிறது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதி தர வேண்டும் என கவர்னரிடம் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆதரவு எம்எல்ஏ.க்கள் கடிதத்தை கொடுத்து சசிகலா தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னருக்கு மனு அளித்துள்ளார். £ர். மேலும் ஆட்சி அமைக்க தம்மை அழைக்காவிட்டால் பொறுமையாக இருக்க முடியாது என ஆளுநரை மிரட்டி நெருக்கடி கொடுத்து வருகிறார் சசிகலா.
அதோடு சசிகலாவுக்கு ஆதரவாக சுப்ரமணியன் சாமி கவர்னரை சந்தித்து பேசியும், இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் கவர்னர் வித்யாசகர் ராவை அதிமுக ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் இன்று திடீரென சந்தித்து பேசினார்.

முதல்வர் ஓபிஎஸ் அணியில் உள்ள இவர் பன்னீர்செல்வம் அளித்த தகவல்களை நேரில் தெரிவிக்கவே கவர்னரை சந்தித்தாக கூறப்படுகிறது.

More articles

Latest article