கூவத்தூரில் பத்திரிக்கையாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல்…கேமராக்கள் பறிப்பு

Must read

சென்னை:
கூவத்தூரில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏ.க்களை சந்திக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா இன்று 2வது நாளாக சென்றார். எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

 

அப்போது கூவத்தூர் பகுதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாள்கள், கேமரா மேன்களை அங்கிருந்து மன்னார்குடி குண்டர்கள் சில தாக்கினர். அவர்கள் கேமராவை பறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். செல்போன்களையும் பறித்தனர்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் இதை கண்டித்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே கூவத்தூருக்கு சசிகலா வருகையை முன்னிட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் பத்திரிக்கையாளர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர். ஆனால் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரிசார்ட்டுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னிருந்தே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டு பகுதிக்கு செல்லும் மக்களை போலீசார் தடுப்பதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் பொதுமக்களை விரட்டியடிப்பதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்களையும் போலீசார் சமாதானம் பேசி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்*

இதனால அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More articles

Latest article