வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

Must read

டில்லி, 

டில்லியில் அடுத்துவரும் நான்கு நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் என அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டில்லி, உத்தரபிரதேசத்தில் சில  இடங்கள், பஞ்சாப், ஹரியானா,மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதிகளில் வெப்பக்காற்று வீசி வருகிறது. இதனால் இந்தப் பகுதிகளில் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் நேற்றுதான் மிக அதிகளவில் வெப்பநிலை இருந்தது.  38.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. மற்ற நாட்களின் வெப்பநிலையிலிருந்து 6 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் அடுத்து வரும் நான்கு நாட்களும் டெல்லியிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் சூரியனின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியிலும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் வரும் 4 நாட்களில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்  இருக்கும். இதைத் தவிர்த்து பிற இடங்களில்  40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article