ஐதராபாத்
தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது/
மத்திய அரசு மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிப்பதாக கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசால் பஞ்சாபி மொழி கட்டாயம் ஆக்கப்பட்டது. அவ்வரிசையில தெலுங்கானாவில் உள்ள ஆணாஈஊ பள்ளிகளிலும் அம்மாநில காங்கிரஸ் அரசு ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாயம் ஆக்கி உள்ளது.
தெலுஞ்கானா மாநில பள்ளிக் கல்வித்துறை,
வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. CBSE, ICSE, IB என எந்த விதமான பாடத்திட்டங்களை பின்பற்றினாலும் இந்த விதி பொருந்தும். 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் தெலுங்கை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும்.
வெளி மாநில மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் எளிமையான முறையில் தெலுங்கு கற்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டே தெலுங்கு மொழி கட்டாயம் ஆக்கி தெலுங்கானாவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், இதை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டவில்லை. முந்தைய அரசு, தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயம் ஆக்குவதில் அக்கறை காட்டவில்லை
என்று அறிவித்துள்ளது.