யாதாத்ரி

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் யாதாத்ரி கோவில் விமான கோபுரத்துக்கு 116 கிலோ தங்கத் தகடுகளைக் காணிக்கையாக அளித்துள்ளார்.

யாதாத்ரி லட்சுமி நரசிம்மர் கோவில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள  மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயில் ரூ.1,800 கோடி செலவில், திருப்பதி ஏழுமலை யான் கோயிலைப் போன்று மிகவும் பிரம்மாண்டமாகப் புதுப்பிக்கப்படுகிறது. இதுவரை இக்கோயில் கட்டு மானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

கடந்த 2 நாட்களுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இக்கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது, கோயில் விமான கோபுரத்துக்குத் தங்கத் தகடுகள் பொருத்தவேண்டுமென முடிவு செய்யப் பட்டது . இந்த பணிக்கு 125 கிலோ தங்கம் தேவைப்படும் எனவும் இதற்கு ரூ. 60 கோடி தங்கம் வேண்டும் எனவும் திருப்பதி ஏழுமலையான் கோயில் விமான கோபுரத்தை வடிவமைத்தவர்கள் கூறியுள்ளனர்.

முதல்வர் சந்திரசேகர ராவ் இதற்கு ஒப்புதல் வழங்கியதோடு, தெலங்கானா மக்கள் அனைவரும் இதற்கு நன்கொடை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் தாமே ஒரு கிலோ 116 கிராம் தங்கம் காணிக்கையாக வழங்குவதாக அறிவித்தார் .

இதைத் தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முதல் நாளே 22 கிலோ தங்கத்தை நன்கொடையாகத் தர முன் வந்துள்ளனர்.  125 கிலோ தங்கம் காணிக்கையாகப் பெறப்பட்ட பின்னர் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.