புதுடெல்லி:
புதுடெல்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது.

இதன் வாயிலாக பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

இந்த் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் அமித் ஆரோராவுடன், தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா போனில் பேசியது தற்போது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு, 6ம் தேதி ஆஜராகும்படி, சி.பி.ஐ., தரப்பில் கவிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், விசாரணையை தனது வீட்டிலேயே வேண்டுமென கவிதா விடுத்த கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் இன்று காலை 11 மணிக்கு அவரது வீட்டில் விசாரணை நடத்த உள்ளனர்.