சென்னை: சுற்றுச்சூழல் வரை அறிக்கையான இஐஏ2020 குறித்து ஆராய குழு அமைக்கப்பட் டுள்ளது என தமிழக முதல்வர் பழனிசாமிநாடு தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள இஐஏ2020 எனப்படும்  சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ஷரத்துக்குள் மாநில உரிமையையும், சுற்றுச்சூழலையும் மீறும் வகையில் அமைந்துள்ளது. இதனால், மத்தியஅரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020க்கு விவசாயிகள் உள்பட சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த வரைவு அறிக்கை சட்டமாக்கப்பட்டால், இந்தியா சுடுகாடாக மாறி விடும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்தகுழுவின் தரும் அறிக்கை அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.