சென்னை:
சிரியர்கள் வரும் 21ந்தேதிக்குள்  பணிக்கு  திரும்ப வேண்டும் என்று தமிழக  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதற்கிடையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,  வருகின்ற 21-ஆம் தேதிக்குள் வெளி மாவட்டங்களுக்கு சென்று தங்கியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில்  வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,  ஜூன் 1ந்தேதி  10 வகுப்பு தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு வருகின்ற 21-ஆம் தேதிக்குள் வெளி மாவட்டங் களுக்கு சென்று தங்கியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்கு திரும்பி உள்ளதை தலைமை ஆசியர்கள் உறுதி செய்ய வேண்டும். திரும்பாத ஆசிரியர்களின்  விவரங்களை 21-ஆம்  தேதி காலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.