சென்னை;  தமிழ்நாடு அரசின் டாஸ்மாக்   மதுபான நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை,  குற்றம் சாட்டி உள்ள நிலையில்,  இந்த முறை கேட்டில் சம்பந்தப்பட்டுள்ள  முக்கிய நபரான ரத்தீஷ்  வீட்டில் சோதனை நடைபெற இருப்பதை அறிந்துகொண்ட அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார்.  இதையடுத்து அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.

அரசு மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு கூறி உள்ளது. அதாவது,  டாஸ்மாக் மதுபான கூடத்துக்கு உரிமம் வழங்குவது, தனியார் நிறுவனங்களிடம் இருந்து டாஸ்மாக்குக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்வது, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இது தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக  அடுத்தடுத்து பல்வேறு சோதனைகளை நடத்தி வரும் அமலாக்கத்துறை, மே 16, 17 ஆகிய இரு நாட்கள்  டாஸ்மாக் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் வீடு, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர், மற்றும் முக்கிய அமைச்சரின் நண்பரான ரத்தீஷ்  உள்பட பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. தொடர்ந்து விசாகன் ஐஏஎஸ்-ஐ இருமுறை அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்துச்சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின் தொடர்ச்சியாக, சூளைமேடு பகுதியில் வசிக்கும் ‘டாஸ்மாக்’ மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன், பெசன்ட் நகர் கற்பகம் கார்டனில் வசிக்கும் மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார், தொழிலதிபர்களான தியாகராயநகரை சேர்ந்த கேசவன், ராயப்பேட்டையை சேர்ந்த தேவகுமார், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாபு, குமரன் காலனியில் வசிக்கும் இந்திரஜித் ஆகியோரது வீடுகளும் அமலாக்கத்துறை சோதனை வளையத்தில் சிக்கியது.  இதில் மின்சார ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார், தொழிலதிபர் தேவகுமார் ஆகிய 2 பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் கொள்முதல், விவகாரத்தில் மையப்புள்ளியாக இருப்பது ரத்தீஷ் என்ற தொழிலதிபர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும்,   சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து குறுகிய காலத்தில் பட அதிபரான ஆகாஷ் பாஸ்கரனும் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கையில் சிக்கினார். தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர்.

இதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு அமைச்சர் ஒருவரின்  நண்பர் என்று கூறப்படும் தொழிலதிபர் ரத்தீஷை விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

ரத்தீஷ் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.  அவருடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்த சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் அவருடைய வீட்டுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வரும் தகவலை முன்கூட்டியே அறிந்து ரத்தீஸ் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படு கிறது. இந்த நிலையில் அவருடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்து பூட்டி, சாவியை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இந்த ரத்தீஷ், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-க்கும் இடையே நடைபெற்ற வாட்ஸ்அப் நகர்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ரத்தீஷை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ரத்தீஷ் என்பவர்   யார்? இவருக்கும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் ஐஏஎஸ் அதிகாரியுமான விசாகனுக்கும் என்ன தொடர்பு? இவரால் எப்படி இவ்வளவு செல்வாக்கு செலுத்த முடிந்தது என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்த சர்ச்சையின் மையப்பொருளாக,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் ரத்தீஷ் என்ற நபர்  இருப்பதாக கூறப்படுகிறது. தீஷ் உதயநிதியின் பால்ய நண்பர் என்று கூறப்படுகிறது.  இவரது மேற்பார்வையின்கீழ்தான், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் செயல்பட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளத. ரஅமலாக்கத்துறை வட்டாரங்களின்படி, ரதீஷ்  ஆட்சியாளர்களின் “நிழல் அதிகார மையமாக” செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இவர்  டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் (எம்டி) எஸ். விசாகனுடன் அவர் நடத்திய வாட்ஸ்அப் உரையாடல்கள் ஊழல் மற்றும் தேவையற்ற செல்வாக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இந்த ஆதாரங்கள் விசாகன்  வீட்டின் பின்புறத்தில் கிழித்து எறியப்பட்ட  சில முக்கிய ஆவணங்களில் இருந்து  அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்தஆவணங்கடிள ஆய்வு செய்தபோது, ரத்தீஷ் உடன் விசாகன் மேற்கொண்ட வாட்ஸ்அப் உரையாடல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. டாஸ்மாக், எந்த நிறுவனத்திடம் இருந்து மதுபானம் வாங்க வேண்டும், யாருக்கு டெண்டர் அளிக்க வேண்டும் என விசாகனுக்கு ரத்தீஷ் ஆர்டர் போட்ட வாட்ஸ்அப் உரையாடல் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதையடுத்து, சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ரத்தீஷின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், அமலாக்கத்துறை வருவதை அறிந்த அவர் தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வருவதாக ரத்தீஸ்க்கு தகவல் கொடுத்ததே அமலாக்கத்துறையில் இருக்கும் சிலர்தான என சொல்லப்படுகிறது.

ரத்தீஷின் அண்ணன், அண்ணி என இருவருமே ஐபிஎஸ் அதிகாரிகள்தான் என்றும், எனவே ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் அவருக்கு உதவி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர், முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் பினாமி என்றும் கூறப்படுகிறது.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை ED பரப்புகிறது! அமைச்சர் முத்துசாமி

ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீட்டில் நடைபெற்ற இடி ரெய்டு நிறைவு – ஆவணங்கள் பறிமுதல்….

ரூ.1000 கோடி முறைகேடு: டாஸ்மாக் இயக்குநர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வீடுகளில் 2வது நாளாக தொடரும் இடி சோதனை…

கிழிந்த நிலையில் ஆவணங்கள் கண்டுபிடிப்பு: டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை….