சென்னை: 50% இருக்கைகளுடன் நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பார்கள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டது.  இதையடுத்து,  தளர்வுகள் காரணமாக  டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ஆனால், பார்களை திறக்க தமிழகஅரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், நாளை முதல் 50 சதவிகிதம் இருக்கைகளுடன் பார் திறக்க தமிழகஅரசு  அனுமதி வழங்கி உள்ளது

தமிழகம் முழுவதும சுமார்  3250 டாஸ்மாக் மது பார்கள் உள்ளன. இநத பார்கள் அனைத்தும்,  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூடப்பட்டன. ஆனால், பொதுமுடக்க தளர்வு அறிவிக்கப்பட்டதும், முதல்கட்டமாக கடந்த மே மாதம் 7ந்தேதி டாஸ்மாக் கடைகள் சென்னை தவிர்த்து   பிற மாவட்டங்களில் முதல்கட்டமாக  திறக்கப்பட்டன. ஆனால், பார்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என்று பார் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மதுபார்களை திறப்பதற்கு உடனடியாக அனுமதிக்காவிட்டால், பார் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இந்தநிலையில், டாஸ்மாக் பார்களை திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. 40சதவிகித இருக்கைகளுடன்  தமிழகம் முழுவதும் உள்ளடாஸ்மாக் பார்களையும் திறப்பதற்கு  தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.