தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO)வை மூன்றாகப் பிரிக்க TANGEDCO நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஆகிய இரண்டு தனித்ததனி நிறுவனங்களாக பிரிக்கப்படுவதுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் என மூன்று நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.

எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையை ஏற்றுக்கொண்டுள்ள TANGEDCO நிர்வாகம் அரசின் அனுமதிக்கு அனுப்பிவைத்துள்ளது.

அரசின் அனுமதி வந்தவுடன் TANGEDCOவை மூன்றாக பிரிக்கும் பணி விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி பற்றாக்குறையால் திண்டாடிவரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மறுசீரமைப்பது குறித்தும் அதன் மேம்பாடு மற்றும் சிறந்த சேவைகளை வழங்குவதற்கான ஆலோசனைகளைப் பரிந்துரைக்க எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தை 2021 ம் ஆண்டு தமிழக அரசு நியமித்தது.

மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையை (TEDA) இணைப்பதன் மூலம் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தை உருவாக்கவும் EY பரிந்துரைத்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் அதன் மொத்த எரிசக்தித் தேவைகளில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும் லட்சிய இலக்கை மாநிலம் கொண்டுள்ளது.

அதேவேளையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மூன்றாகப் பிரிக்க வழங்கப்பட்டுள்ள பரிந்துரையை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்துள்ளதோடு தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமல் அரசு தன்னிச்சையான நடவடிக்கையில் இறங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடன் ரூ.1.4 லட்சம் கோடியாக உயர்வு: தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களாக பிரிக்க தமிழ்நாடு அரசு முடிவு…