‘டான்செட்’ தேர்வு முடிவுகள் ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிடப்படும்! அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

Must read

சென்னை: ‘டான்செட்’ தேர்வு முடிவுகள் ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கிழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளான அரசு மற்றும் அரசு உதவி பெறும்  கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் படிப்பான  எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளில் சேர ஒவ்வொரு ஆண்டும் ‘டான்செட்’  எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான  ‘டான்செட்’ தேர்வு கடந்த 14, 15ந்தேதி ஆகிய 2 நாட்களாக நடைபெற்றது.  சென்னை, மதுரை உள்பட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் டான்செட் நுழைவுத்தேர்வை எழுதினார்கள்.

இந்த நிலையில்  டான்செட் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 10ந்தேதிக்குள்  வெளியிட திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article