திமுக மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 பேரும் முதல்வர் மு.க.ஸ்டாலிடம் வாழ்த்து….

Must read

சென்னை; திமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 பேரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாட்டில் காலியாக 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேரதல் அடுத்த (ஜூன்) மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 4 இடங்களும், அதிமுக கூட்டணி சார்பில் 2 உறுப்பினர்களும் தேர்வு செய்ய முடியும். அதன்படி, திமுக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார்.  அதன்படி, மாநிலங்களவை வேட்பாளராக  தஞ்சை கல்யாணசுந்தரம் , கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து மாநிலங்களை வேட்பாளர்கள் 3 பேரும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

More articles

Latest article