சென்னை:  அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப் படிப்புக்கான டான்செட் (TANCET) தேர்வுக்கு விண்ணப்பிப்ப தற்கான கடைசி தேதி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தால் தமிழ்நாடு டான்செட் எனும் பொது நுழைவுத் தேர்வு (TANCET) நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே முதுநிலை பட்டப்படிப்புக்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவர். அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பொறியியல், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் டான்செட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான  அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவத்துள்ளது.