தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை! கோவையில் ஸ்டாலின் பேச்சு…

Must read

கோவை: தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுகவுக்கு ஆதரவு கோரும் வகையில், தேர்தல் பரப்புரை செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.   இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தும், மனுக்களை பெற்றும் ஆதரவு திரட்டி வருகிறார்.

தற்போது வையில் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பின்னர் , அவர்களிடையேபேசும்போது,

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தி, இளைஞர்களின் வாழ்க்கையை காப்பாற்றுவது தான் திமுகவின் முதல் பணியாக இருக்கும் என  தெரிவித்தார்.

மேலும்,  இனிமேல் தமிழக இளைஞர்கள் வேலைக்காக வேறு எந்த மாநிலத்திற்கும் செல்ல தேவையில்லை. வேலை இல்லாத சூழல் இருக்காது.

தமிழகர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்க, திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞர்களின் படிப்பிற்கு ஏற்ற வேலையை அவரவர் பகுதியிலேயே வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை திமுக நிச்சயமாக எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article