டில்லி:

ந்திய கடலோர காவல்படை இயக்குனரின் பதவிக்காலம் இந்த மாதம் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜனை நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்திய கடலோர காவல்படைக்கு தற்போது ராஜேந்திர சிங் இயக்குனராக இருந்து வருகிறார். அவரது பதவி காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய இயக்குனரை . மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு நியமித்து உள்ளது.

அதன்படி மும்பை மேற்கு மண்டல கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்த  தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜனை புதிய இயக்குனராக நியிமித்த உள்ளது. அவர்  ஜூலை 1 ஆம் தேதி  புதிய இயக்குநராகப் பதவியேற்கிறார்.