சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு பங்களாக்களை விரைந்து காலி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் இதய பகுதியான அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கான அரசு பங்களாக்கள் உள்ளன. இதில் உள்ள விசாலமான மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய 60 பங்களாக்கள் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்தபங்களாக்களில் கடந்த திமுக ஆட்சியின்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்த பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, முத்துசாமி, பெரிய கருப்பன், சாமிநாதன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், கயல்விழி உள்ளிட்ட 23 அமைச்சர்கள் இங்கு தங்கி இருந்தனர்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சி மற்றும் அமைச்சரவை உருவாக உள்ளதால், முன்னாள் அமைச்சர்கள் அரசு பங்களாக்களை உடனே காலி செய்ய வேண்டும் பொதுப்பணித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
[youtube-feed feed=1]