சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் பரபரப்பாக காணப்படும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் அர்லேகரை இன்று சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே காலை 11.30 மணி அளவில் தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி 2வது முறையாக ஆளுநரை சந்தித்த நிலையில், அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும்  ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று மதியம் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்க இருக்கிறார்.

இதன் காரணாக,  தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரின் இன்றைய கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக பெரும்தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், புதிதாக கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கிய தவெக,  108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக   உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் பெற முடியாத நிலையில் இருக்கிறது.

இதையடுத்து, தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததால், இன்று இரண்டாவது முறையாக  ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இதனால், அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக ஆட்சி அமைக்க திமுகவுடன் மறைமுக பேச்சு நடத்துவதாக ஒருபுறமும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆதரவு அளிக்க போர்க் கொடி ஏந்தி புதுவை விடுதியில் பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருப்பதாக மறுபுறமும் செய்திகள் பரவி வருகின்றன.

இந்த பரபரப்புக்கு மத்தியில்,  தமிழ்நாடு ஆளுநருடன் இன்று பகல் 12 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்திக்க வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]