பேருந்து கட்டணம் குறைப்பு திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!:  கனிமொழி எம்.பி.

Must read

சென்னை:

மிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பது திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி,  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இதனையடுத்து பேருந்து கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டது. தமிழக அரசு வெளியிட்ட பேருந்து கட்டணம் குறைப்பு வெறும் கண்துடைப்பு, திட்டமிட்டபடி நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ள விஜயகாந்த், திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் என அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி, “தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பது திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ மக்கள் மீது ஏற்றிவைக்கப்பட்ட சுமை முழுமையாக இறக்கி வைக்கப்படவில்லை, வெறும் கண் துடைப்பாகவே உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article