சென்னை: கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, சுற்றுலாத்தலங்கள் கடந்த இரு ஆண்டுகளாக மூடப்பட்டு  பொலிவிழந்த நிலையில்,  300 சுற்றுலாத்தலங்களை சர்வதேச தரத்து மாற்ற தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் சுற்றுலாத்துறை ஊக்குவித்து, உலக நாடுகளின் கவனத்தை பெறும் வகையிலும் தமிழ்நாட்டிற்கு வருமானத்தை ஈட்டும் வகையிலும், தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல், சுற்றுலாத்தலங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டின் கலாச் சாரம், வரலாறு மற்றும் பாரம் பரிய உணவுமுறையை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

‘மேலும், தனியார் மற்றும் அந்நிய முதலீட்டை உருவாக்குதல், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலா பெருந்திட்டத்தை ஏற்படுத்த தமிழக அரசு சுற்றுலாத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மாநிலத்தில் பிரபலமான 200 சுற்றுலாத்தலங்களை அடையாளம் கண்டு அவற்றை சர்வதேச தரத்துக்கு இணையாக மாற்றும் விதமாக சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.