சென்னை,

மிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த, தமிழக பாஜக தலைவர் தமிழிசை, செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை,  கடந்த மாதம் 21ந்தேதிகூட,   தமிழக அரசு தளர்ச்சியாக செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

ஆனால், தற்போது  தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக சட்டிபிகேட் கொடுத்திருப்பது பொதுமக்களிடையே வியப்பை  ஏற்படுத்தி உள்ளது.  15 நாட்களுக்குள் தமிழிசையின் மனமாற்றம் அவரது கட்சி தொண்டர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று தலைமை செயலகம் வந்த தமிழக பாஜக தலைவர், தமிழிசை அங்கு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தார். அப்போது அவரிடம் மோடி எழுதிய புத்தகத்தை கொடுத்தார்.

அதைத்தொடர்ந்த கோட்டை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரை சந்தித்து அவரிடம், மாணவர்கள் எளிதாக தேர்வு எழுதுவது தொடர்பாக பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தை கொடுத்தேன் என்று கூறினார்.

பிரதர் ஆப் நேசன் என்ற அடிப்படையில் மோடி இந்த புத்தகத்தை  எழுதியுள்ளார். இதனை அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அளிக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.

காங்கிரஸ் ஆட்சியின்போது பொறியியல் படித்த மாணவர்கள் பக்கோடா கூட விற்க முடியாத நிலையில் இருந்தனர் என்றும்,  நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக  அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் மூலம் நீட் தேர்வை  சிறப்பாக எழுத அரசு முயற்சிக்க வேண்டுமெனக் கோரினேன் என்றும், தமிழக  அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி தொடர்ந்த வானொலியில் பேசி வரும் மான் கி பாத் (மனதோடு பேசுகிறேன்)  என்ற நிகழ்ச்சியில் அவர் பேசிய தொகுப்பன  Exam warriors என்னும் நூல். மத்திய அமைச்சர்கள் சுஸ்மா, ஜவடேகர் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.