சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, அது தொடர்பாக அனைத்து துறைகளும் அறிக்கை தாக்கல் செய்ய நிதித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத்துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசுசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுக்கு, தமிழ்நாடு அரசின் நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
2021உ கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் நிறைவேற்ற மறுத்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சகிளும், அரசு ஊழியர் சங்கத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில், அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என கூறி ஆட்சியை பிடித்தது. ஆனால், அதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடாததால், அரசியல் ஊழியர் சங்கத்தின் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து, துறை வாரியாக அறிக்கை அளிக்க திமுக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மத்தியஅரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்துவந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது.
அதற்கு மாறாக, அப்போதைய அதிமுக அரசு, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் தொடக்கம் முதலே இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தனர்.
அரசு ஊழியர்களின் 13 ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016 ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான வல்லுநர் குழு அமைத்து அறிக்கை பெற்றார். ஆனால், அதன்பிறகு வந்த எடப்பாடி அரசு, அந்த அறிக்கையை வெளியிடாமல் மவுனம் காத்து வந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2019 ஜனவரி மாதம், வல்லுநர் குழு அறிக்கையை வெளியிடப்பட்டது. அதில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்தது.
ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டுச் சட்டப்பேரவை தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப் படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக, ஆட்சிக்கு வந்த உடனேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த அரசு ஊழியர்களுக்கு, இதுவரை சாதகமான அறிவிப்பை வெளியிடவில்லை. கடந்த மே மாதம் (2022) சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நிதிநிலையை காரணம் காட்டி பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை என்று கூறியது.
இதனால் திமுகஅரசுமீது அரசு ஊழியர்களும் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத்துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மத்தியஅரசு மீண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை திட்டவட்டமாக கூறியுள்ளது. என்று கூறப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் தன்னிச்சையாக பலுழய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளன. அதன்படி, முதலில், மேற்கு வங்க மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்டன.
அந்த வரிசையில் ஆறாவது மாநிலமாக ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்தநாளே இமாசலப் பிரதேச காங்கிரஸ் அரசு தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒன்றரை லட்சம் பேர் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில்தான், 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய முறை சாத்தியக் கூறுகள் மற்றும் விவரங்களை மாநில நிதித்துறை கோரியுள்ளது.