சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ந்தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு, கலை அறிவியல் மற்றும்பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் நேற்று (ஜூலை 26ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு இன்று முதல் துவங்கியது. பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணைய தளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு வருகிற செப் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் அதாவது ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இதை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு வருகிற செப் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
தொடர்ந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.