சென்னை

யக்குநர் ஏ ஆர் முருகதாசுக்கு எதிராக சர்க்கார் படம் குறித்துத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் என்னும் திரைப்படம் வெளியானது,  தமிழக அரசையும் மற்றும் அரசு மக்களுக்கு வழங்கும் இலவச திட்டங்களை குறித்தும் படத்தில் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதையொட்டி ஏ ஆர் முருகதாஸ் மீது தேவராஜன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.  அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு ஒன்று பதியப்பட்டது.   ஏ ஆர் முருகதாஸ் சார்பில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்ட்து.

இந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, “தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து எந்த ஒரு தனிநபரோ அல்லது அரசோ கேள்வி எழுப்பவோ வழக்கு தொடரவோ முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எனவே அதன் அடிப்படையில் ஏ ஆர் முருகதாஸ் மனுவை ஏற்று அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்கிறோம்” என உத்தரவிட்டுள்ளது.