சென்னை :

மிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட வாரியான பட்டியல்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1366 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,88,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,777 பேர் உயிர் இழந்து 7,66,261 பேர் குணம் அடைந்து தற்போது 10,882 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,17,204 பேர் பாதிக்கப்பட்டு இதில் 2,09,997 பேர் குணம் அடைந்து தற்போது 3,336 பேர் சிகிச்சையில் உள்ளனர், 3,871 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது இங்கு இன்று 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கோவை மாவட்டத்தில் 49,430 பேர் பாதிக்கப்பட்டு 617 பேர் உயிர் இழந்துள்ளனர். 47,881 பேர் குணம் அடைந்து தற்போது 932 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக சேலம் மாவட்டத்தில் இன்று 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 30,263 பேர் பாதிக்கப்பட்டு 29,284 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 535 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இங்கு இதுவரை 444 பேர் உயிர் இழந்துள்ளனர்.