துரை

மிழ்நாடு தலைமை செயலர் கிரிஜா வைத்யநாதன் பொய் வாக்குமூலம் அளித்ததாக குற்றம் சாட்டி மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் வருடம் குட்கா வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்கள் அரசுக்கு அளிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ராஜேந்திரன் ஒரு வழக்கில் கூறி இருந்தார்.   அது குறித்து தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்யநாதன் அளித்த பிரமாண பத்திரத்தில் அரசுக்கு அது போல எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை என பதில் அளித்திருந்தார்.

கிரிஜா வைத்யநாதன்

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.   அப்போது காவல்துறை அதிகாரி அளித்திருந்த தகவல்கள் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.     அதில் அந்த தகவல் தலைமைச் செயலரால் பெறப்பட்டு அதன் பிறகு போயஸ் கார்டனுக்கு அனுப்பப் பட்டதாக குறிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

அதை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏஐடியுசி யின் மதுரை மாவட்ட செயலர் கே கதிரேசன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  அவர் அந்த மனுவில்  ”குட்கா வழக்கு சம்பந்தப்ப்ட்ட எதுவும் அரசுக்கு வர வில்லை எனதலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.  ஆனால் அந்த தகவல்கள் அரசால் பெறப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

எனவே கிரிஜா வைத்யநாதன் பொய்யான வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது.   எனவே அவர் பொய் வாக்குமூலம் அளித்தற்காக அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.