சென்னை: சென்னையில் நாளை ( 26.05.26 ) 5 மணி நேரம் மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை சென்னையில் பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் நாளை ( 26.05 26 ) மின் தடை செய்யப்படுகிறது. இந்த மின்தடையானது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அந்த வகையில், மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தி.நகர் ;
பசுல்லா சாலை , சாரி தெரு, பார்த்தசாரதி புரம், உண்ணாமலையம்மாள் தெரு, ஹபிபுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, காந்தி தெரு, ஜவஹர்லால் நேரு தெரு, ராமச்சந்திர அய்யர் தெரு, ராஜபிள்ளை தோட்டம், மாம்பலம் ஹைரோடு, கோடம்பாக்கம் ஏரியா, பராங்குசபுரம், சிஆர்பி கார்டன், மங்கேஷ் தெரு, ரெயில்வே பார்டர் ரோடு, ஸ்டேஷன் வியூ ரோடு, பாரதி தெரு மற்றும் திலக் தெரு.
தசரதபுரம் ;
காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா காலனி, ஆற்காடு சாலை, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழசன் நகர், வெங்கடேச நகர், அருணாச்சலம் சாலை.
சாலிகிராமம் ;
அருணாச்சலம் ரோடு, குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், ஆற்காடு ரோடு, எஸ்எஸ்ஆர் பங்கஜம் ரோடு.
கே.கே.நகர் ;
பரணி காலனி , ஆற்காடு சாலை, காவேரி மருத்துவமனை, சூரியா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம்.
விருகம்பாக்கம் ;
ஆற்காடு ரோடு, என்எஸ்கே லேன், ஷாமலா டவர்.
சின்மயா நகர் ;
முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜர் சாலை.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]