சென்னை:

தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி நடத்திய காணொளி காட்சி கலந்துரையாடலில், பாஜக கூட்டணியில் சேர  திமுக, அதிமுகவுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பிரதமர் மோடி, பாஜக தொண்டர் களிடம் காணொளி காட்சி மூலம் உரையாடி உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறார்.

“எனது வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி”  என்ற பெயரில் பாஜ சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த உரையாடலில்  இன்று தமிழகத்தில் உள்ள அரக் கோணம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர், தர்மபுரி உள்பட  5 நாடாளு மன்ற தொகுதிகளில் உள்ள கட்சி தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாடினார்.

சென்னை அருகே உள்ள அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் இந்த கலந்துரையால் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் தமிழிசை உள்பட முக்கிய பாஜக நிர்வாகிகள் இந்த உரையாடலில் கலந்து கொண்டனர்.

அப்போது தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி,  தமிழகத்தைச் சேர்ந்த சகோ தர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதாகவும், கடின மாக உழைக்கும் விவசாயிகளுக்கு, இந்த நாளில் வளம் பெருக வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இந்த விழாவானது நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார். அதைத்தொடர்ந்து உரையாடல் நடை பெற்றது.

அப்போது பாஜக தொண்டர்கள் பாஜக ஆட்சி அமைந்தால் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில்  இடம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு,  பாஜக தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்றாலும் கூட்டணியோடு ஆட்சியமைக்கவே முன்னு ரிமை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கேள் விக்கு, கூட்டணி விஷயத்தில் பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பாஜகவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றார்.

தமிழகத்தில் அதிமுக, ரஜினிகாந்த் அல்லது திமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் தெரிவித்த மோடி, இந்த விஷயத்தில் மறைந்த பாஜக தலைவர் மறைந்த வாஜ்பாய் காட்டிய வழியையே  பின்பற்றும் என்றும்,  அரசியல் பிரச்சனைகள் எத்தனை இருந்தாலும்,  மக்களுடன் கூட்டணி அமைப்பதே வெற்றிகரமான கூட்டணியாக இருக்கும்! என்று கூறினார்.

தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளது என்றவர், பழைய நண்பர்களையும் வரவேற்க தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

பொருளாதார நிர்வாகத்திறன் இன்மை மற்றும் ஊழல் தான் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தோல்வி என பலரும் கருதுகின்றனர்: மோடி

ஆனால், காங்கிரஸ் நமது ஆயுதப் படையைக் கூட ஆழமாக சேதப்படுத்தியுள்ளது: மோடி

பல ஆண்டுகளாக, பாதுகாப்புத்துறையை புரோக்கர்களின் கூடாரமாக மாற்றி வைத்திருந்தது காங்கிரஸ் : மோடி