சென்னை:

நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நர்ஸ் (செவிலியர்) பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கலந்தாய்வுக்கு தடை விதிக்க கோரி, செவிலியர்கள் ஊழியர்கள் நலச்சங்கச் செயலர் கார்த்திக் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்தமனுவில், அரசு கலந்தாய்வில் பங்கேற்க விரும்புபவர்கள், தற்போது  பணிபுரியும் இடத்தில் ஓராண்டாகப் பணியாற்றி வருவதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இதனால் பெரும் பாலோர் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கலந்தாய்வை தடை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நிதி மன்றம், நாளை நடைபெற இருந்த நர்ஸ் கலந்தாய்வுக்கு இடைக்கல தடை விதித்தது.