தமிழக போக்குவரத்து ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி!

Must read

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையரான பணீந்திர ரெட்டிக்கும், போக்குவரத்து ஆணையரான ஜவகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,02,815  ஆக உயர்ந்துள்ளது.  அத்துடன் 4 எம்.பி.க்கள் 31 எம்எல்ஏக்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த  நிலையில், தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையரான பணீந்திர ரெட்டிக்கும், போக்கு வரத்து ஆணையரான ஜவகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர்கள் இருவரும் கிண்டியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவருடனும் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

More articles

Latest article