11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 24-ம் தேதி தொடங்கும்! செங்கோட்டையன்!

Must read

சென்னை: தமிழகத்தில் வரும் 17ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 11-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 24ந்தேதி முதல் நடைப்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா  தொற்று பரவல்  காரணமாக 7வது கட்ட ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில்,  பல தனியார் பள்ளிகள் ஆன்லைன்  வகுப்புகள் தொடங்கி மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி  வருகின்றன.

இந்த அரசு பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இதையடுத்து, தமிழகஅரசும், கல்விச்சேனல் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. இதையடுத்து, பள்ளியில் மாணவர்கள்சேர்க்கை குறித்த அறிவிப்பும் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில்,   தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிழும் வரும் 17-ம் தேதி முதல் 1,6,9 -ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என  அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  11 -ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை, வரும் 24 -ம் தேதி முதல் நடைபெறும் எனவும், ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சேரும் 2 முதல் 10 -ம் வகுப்பு மாணவர் சேர்க்கை, 17 -ம் தேதி முதல் தொடங்கும்.

அதுமட்டுமின்றி, மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளே இலவச பாடப்புத்தககங்கள் மற்றும் நோட்டுகள், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article