டெல்லி: தகவல் பெறும் உரிமை சட்டமன்ற, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க மறுக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய தகவல் ஆணையம் குற்றம் சாட்டி உள்ளது.

அரசு நிர்வாகம் பற்றி பலதரப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த காங்கிரஸ் தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும், அரசு பணிகளில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள  மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள் பதில் தெரிவிக்க வேண்டியது, அரசியல் சாசனப்படி கடமையாகும். ஆனால், பல கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசு துறைகள் பதில் தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இந்தியாவில் உள்ள தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டினை சதார்க் நாக்ரிக் சங்கதன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  அதில்,  10 மாநில தகவல் ஆணையங்கள் மட்டுமே முழு தகவல்களையும் வழங்கியுள்ளன என 2021-22 ஆண்டுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசிடம் ஆர்டிஐ சட்டத்தின்படி  கேட்கப்பட்ட கேள்விகளில் 14 சதவிக கேள்விகளுக்கு மட்டுமே தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தகவல் அளித்துள்ளது என்று மத்திய தகவல் ஆணையம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. பதில்களை மறுக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது மத்திய தகவல் ஆணையம் குற்றம் சாட்டி உள்ளது. 

தமிழ்நாட்டை தொடர்ந்து,    இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இது,  23 சதவிகித கேள்விகளுக்கு மட்டுமே  மாநில தகவல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

ஆந்திர பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில் அளித்து சபாஷ் பெற்றுள்ளது.

இதுகுறித்த பட்டியலை வெளியிட்டுள்ள  சதார்க் நாக்ரிக் சங்கதன் அமைப்பு, “ஒரே மாதிரியான தகவல்களைக் கோரி மொத்தம் 145 ஆர்டிஐ விண்ணப்பங்கள் 29 தகவல் ஆணையங்களில் தாக்கல் செய்யப்பட்டதாகவும்,  தகவல்களை தெரியப்படுத்துவதில் ஒரு மாநில  அரசு அமைப்பாக தகவல் ஆணையம் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆர்டிஐ விண்ணப்பங்கள் கண்காணிக்கப்பட்ட்டு வந்தாக தெரிவித்து உள்ளது.

மேலும், மாநில தகவல் ஆணையத்திற்கு வந்த புகார்கள், விதிக்கப்பட்ட அபராதம், இழப்பீடு உள்பட கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் எழுப்பப் பட்டுள்ள நிலையில், இதுபோன்ற கேள்விக்கு  பதில் அளிக்க மறுத்துள்ள தமிழ்நாடு தகவல் ஆணையம் , படு மோசமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டால், மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலை பெற்ற பிறகுதான் தகவல்கள் அளிக்க முடியும் என தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்களை அளிக்க மாநில சட்டப்பேரவையின் அனுமதி தேவையில்லை. தற்போது அமலில் உள்ள மாநில சட்டத்தை மேற்கோள்காட்டியும் பல்வேறு காரணங்களை சொல்லியும் சத்தீஸ்கர் மாநில தகவல் ஆணையம் தகவல்களை வழங்க மறுத்துள்ளது என்று தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளதுடன்,  தகவல்களை வழங்காமலேயே ஆர்டிஐ விண்ணப்பங்களை திருப்பி அளிக்கும் சம்பவங்களும் நாடு முழுவதும் உள்ள மாநில தகவல் ஆணையங்களில் நிகழந்துள்ளது.

ஒவ்வொரு ஆணையரும் ஓராண்டில் குறிப்பிட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மற்றும் புகார்களை தீர்க்க வேண்டும். அதன்படி, 29 தகவல் ஆணையங்களில், தலைமைத் தகவல் ஆணையம் மட்டுமே, அந்த வரம்பை நிறைவேற்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலையில் தமிழ்நாடு 2வது இடம்! பாராளுமன்றத்தில் தகவல்

தன்னம்பிக்கையற்றவர்களாக மாறும் தமிழர்கள்: தற்கொலையில் தமிழ்நாடு 2 ஆவது இடம்!