ஒவ்வொரு படம் வெளியாகும்போது, அப்பட நாயகனின் முந்தைய படத்தின் வசூல் நிலவரத்தை வைத்து வியாபாரம் தொடங்கப்படும்.

சமீபகாலமாக பெரும் விலை கொடுத்து வாங்கிய படங்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளன. இதனால், புதிய நடைமுறைகளை அறிவுறுத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்.

இப்பட்டியலில் விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலர் நடிகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால், இவர்களுக்கு போதிய வியாபாரம் இல்லையா? என்ற கருத்தும் பரவத் தொடங்கியது.

அந்த அறிக்கையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கூறவில்லையே… இப்படிப் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறோம், அவ்வளவுதான். ஷேர் தொகையை அதிகமாகக் கொடுத்தால் நாங்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை என சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.