சல்மான் கானின் சர்ச்சைக் கருத்துகளுக்கு நெட்டிசன்கள் கண்டனம்…!

Must read

சல்மான் கான் – கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவான ‘பாரத்’ திரைப்படம், ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. கத்ரீனா கைஃப் வேடத்தில், முதலில் பிரியங்கா சோப்ரா நடிப்பதாக இருந்ததாம்.

“வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பு வரும்போது, அதை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா, வழக்கமாக இதுபோன்ற வாய்ப்பு வந்தால் கணவனையே விட்டுவிட்டு வருவார்கள்” என்று அதற்கு சாலமன் பேட்டி கொடுத்துள்ளார்.

இது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது . இந்தக் கருத்துக்கு, நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு நிகழ்ச்சியில், இது தனது திரை வாழ்க்கையில் மிகச்சிறந்த கதாபாத்திரம் என கத்ரீனா சொன்னபோது, சல்மான் , ‘பிரியங்காவுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்..

இன்னொரு சந்தர்ப்பத்தில் இந்தக் கதாபாத்திரத்துக்கான தயாரிப்பு பற்றி கத்ரீனாவிடம் கேட்டபோது, ‘பிரியங்கா தங்களுக்கு அவ்வளவு நாட்கள் தரவில்லை’ என்று கூறியுள்ளார் சல்மான். மேலும், படப்பிடிப்புக்கு ஐந்து நாட்கள் முன்னால், தன்னால் நடிக்க இயலாது என பிரியங்கா சொன்னது எவ்வளவு இனிமையானது எனவும் நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதை தவிர பேட்டி ஒன்றில் நடிப்பல்லாது கத்ரீனா வேறென்ன தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்? என பேட்டியாளர் சல்மானிடம் கேட்டபோது, “அவர் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்” என்று தொடர்ந்து கூறி வருவது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

More articles

Latest article