தமிழக புதிய கவர்னர் சங்கரமூர்த்தி….?!

Must read

டில்லி,
மிழக புதிய ஆளுநராக கர்நாடகாவை சேர்ந்த டி.எச்.சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் என உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கிற்து.
தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து  புதிய ஆளுநர் யார் என்கிற விவாதம் எழுந்தது.
ஆனால், மகாராஷ்டிரா மாநில அளுநர் வித்யாசாகர்ராவை தமிழக பொறுப்பு ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. தற்போது ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக இருக்கிறார்.

சங்கரமூர்த்தி

இதற்கிடையில், தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஆனந்தி பென் படேல் ஆகியோர்களில் ஒருவர் ஆளுநராக பொறுப்பேற்கலாம் என ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் கூறப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது ஜெயலலிதா மறைந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநில மூத்த பாஜக தலைவரும், ஆர்.எஸ்.எஸ். தொண்டருமான டி.எச். சங்கரமூர்த்தி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சங்கரமூர்த்தி, 1940 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது கர்நாடக சட்டமேலவையின் தலைவராக உள்ளார்.
இவர் 1966-ம் ஆண்டு முதல் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றியவர்.
மிசா காலத்தில் பெல்காம் சிறையில் 19 மாதம் அடைக்கப்பட்டிருந்தார். 1988-ம் ஆண்டு முதல் கர்நாடாக சட்டமேலவை உறுப்பினராக இருந்தார்.
2002 முதல் 2006 வரை சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார்.
2006ம் ஆண்டு ம.ஜ.த.-பா.ஜ. கூட்டணி ஆட்சியில் கர்நாடக மாநில உயர்கல்வித் துறை அமைச்சராகவும் இருந்தவர்.
கர்நாடக மாநில திட்டக்குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2020-ல் கர்நாடகாவின் வளர்ச்சி என்று குழுவின் வழிகாட்டியாக இருந்து மாநில வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்துள்ளார்.
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதைனை தொடர்ந்து, சங்கரமூர்த்தி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என டெல்லி தகவல்கள் கூறுகிறது. எனவே, விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Karnantaka BJP Leader DH Shakaramurthy may be appointed as Governor of Tamil Nadu.

More articles

Latest article