சென்னை,

கறுப்புப் பணம், கள்ள ரூபாய் நோட்டை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 மதிப்பிலான நோட்டுகளை வங்கி, அஞ்சல் நிலையம் மற்றும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இப்போது ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட கடைசிக் காலக்கெடு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.  இந்தச் சூழலில் அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டு அவசர அவசரமாக கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் பலர் செலுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஓபி யில் ரூ 246 கோடியை முதலீடு செய்துள்ளார்.

அரசு விதிப்படி அந்தப்பணத்துக்கு 45 சதவிதம் வரியும், மொத்தபணத்தில் 25 சதவிதம் ஏழை மக்களுக்கான பிரதமரின் நலத்திட்டத்திற்கு செல்லும். இதற்கு ஒப்புதல் வழங்கிய பிறகுதான் 246 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின்  அதிகாரி கூறியுள்ளார்.                                                                                                                     

இவரைப்போல் 200 க்கும் மேற்பட்டவர்கள் 600 கோடி ரூபாய்க்கும் மேல் டெபாசிட் செய்திருப்பதாக அதிகாரி கூறினார்.   மேலும் பல நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் பிரதமரின் நலத்திட்டத்தின்படி பணம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்,

இந்தமாத இறுதிக்குள் இத்திட்டத்தில் ஆயிரம் கோடி வரை சேரும் என்று கூறிய அவர், மத்திய அரசு கொடுத்திருக்கும் கடைசி கெடுவை பயன்படுத்தி கருப்புப்பணத்தை கணக்கு காட்டவில்லை யென்றால் ஏப்ரல் முதல்தேதிக்குப் பிறகு அவர்கள் வருந்தவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்த அதிகாரி எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் 85 லட்சம் வங்கிக்கணக்குகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும்28 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இமெயில் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பலர் பதிலளித்த விட்டனர். அவர்கள் அரசின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டால் 45 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். கணக்கில்வராத பணத்தை நாங்கள் கண்டுபிடித்தால் 83.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.