தமிழக இல.கணேசன், மத்தியபிரதேச எம்.பி., ஆகிறார்!

Must read

சென்னை:
மிழக பாரதியஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் இல.கணேசன் டெல்லி மேல்சபை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
ila-ganes
தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் பாராளுமனற் மேல்சபை எம்.பி.யாக மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
ஏற்கனவே டெல்லி மேல்சபையில் எம்.பி.யாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னர் ஆக போய்விட்டதால்,  அந்த இடத்துக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ல் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த இடத்தை தமிழகத்தை சேர்ந்த இல.கணேசனுக்கு ஒதுக்க பாரதியஜனதா தலைமை முடிவு செய்துள்ள தாக தெரிகிறது. இல.கணேசனை மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்ய பா.ஜனதா மேலிடம் பரிசீலித்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஒரே ஒரு எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் இருக்கிறார். இல.கணேசனையும் எம்.பி. ஆக்கினால் மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்த முடியும். அதன் மூலம் கட்சியையும் தமிழகத்தில் வளர்க்க முடியும் என்று மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள்.
கட்சியின் அனுபவமிக்க மூத்த தலைவர்களை கவுரவிக்கும் வகையிலும் கட்சி தலைமை இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article